/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
/
பெருமாள் கோவில்களில் திரண்ட பக்தர்கள்
ADDED : அக் 04, 2025 11:27 PM

திருப்பூர்: நேற்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், காலை மற்றும் மாலை நேரங்களில், பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் வளாகத்தில், பெருமாள் தாசர்களுக்கு, அரிசி, காய்கறிகளை படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் திருப்பதி கோவில், குருவாயூரப்பன் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில், அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் சாமளா புரம் கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், அவிநாசி காரணப்பெருமாள் கோவில் உட்பட திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் துளசி மாலை சாற்றியும், தீபம் ஏற்றி வைத்தும் பெருமாளை வழிபட்டனர்.