/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரிமலைக்கு மாலை அணிய தயாராகும் பக்தர்கள்
/
சபரிமலைக்கு மாலை அணிய தயாராகும் பக்தர்கள்
ADDED : நவ 14, 2024 04:39 AM

உடுமலை: உடுமலையில், அய்யப்ப சுவாமிக்கு மாலை அணிய தேவையான பொருட்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
சபரிமலை ஸ்ரீ அய்யப்ப சுவாமிக்கு, கார்த்திகை மாதம், மாலை அணிந்து விரதம் இருந்து, இரு முடி கட்டி, சபரிமலை செல்வதை பக்தர்கள் பாரம்பரியமாக கடை பிடித்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம், வரும், 16ம் தேதி துவங்குவதால், ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிய, பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்காக, வேஷ்டி, துண்டு, மாலை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால், உடுமலை நகரிலுள்ள கடைகளில், அய்யப்ப சுவாமிக்கு மாலை அணிய தேவையான பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
உடுமலை வ.உ.சி., வீதியில், அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அணிவதற்காக, விற்பனைக்கு தொங்கவிடப்பட்டுள்ள மாலைகள் மற்றும் வேஷ்டிகள்.