/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆல்கொண்டமால் திருவிழாவில் பக்தர்கள் அவதி; வசதிகளை ஏற்படுத்த மனு
/
ஆல்கொண்டமால் திருவிழாவில் பக்தர்கள் அவதி; வசதிகளை ஏற்படுத்த மனு
ஆல்கொண்டமால் திருவிழாவில் பக்தர்கள் அவதி; வசதிகளை ஏற்படுத்த மனு
ஆல்கொண்டமால் திருவிழாவில் பக்தர்கள் அவதி; வசதிகளை ஏற்படுத்த மனு
ADDED : ஜன 02, 2025 10:15 PM
உடுமலை; ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோவில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், மக்கள், இக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.
பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் கோவிலில் நடக்கும் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஹிந்து அறநிலையத்துறை சார்பில், திருவிழாவின் போது கேளிக்கை விளையாட்டுகள் நடத்தவும், கடைகள் அமைக்கவும் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. ஆனால், திருவிழாவுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆல்கொண்டமால் கோவில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
மனுவில், 'திருவிழாவின் போது, பக்தர்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால், விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்கிறது. குடிநீர், கழிப்பிடம் மற்றும் தெருவிளக்கு வசதியும் குறைவாகவே உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு ரேக்ளா வண்டிகள் வரும், சோமவாரப்பட்டி குளத்துப்பாதையை சீரமைக்க வேண்டும். வழியோரத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கோவிலுக்கு செல்லும் வழியில், 'டாஸ்மாக்' மதுக்கடை செயல்படுகிறது. அவ்வழித்தடத்தில், 'குடி' மகன்களால், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. திருவிழாவுக்கு முன் இப்பிரச்னைகள் குறித்து, உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

