/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காப்புக்கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்
/
காப்புக்கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்
ADDED : ஆக 23, 2025 12:28 AM

திருப்பூர்: ஹிந்து முன்னணி சார்பில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான சிலைகளை பிரதிஷ்டை செய்து, நான்கு அல்லது ஐந்து நாட்கள் கொண்டாடி, விசர்ஜனம் செய்யப்படுகிறது.
சதுர்த்தி விழா கொண்டாட்டம் சிறப்பாக அமைய வேண்டிய, இளைஞர்கள் காப்பு கட்டி, விரதம் இருப்பது வழக்கம். வரும், 27ம் தேதி சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில், நேற்று பக்தர்கள் விரதம் துவங்கினர்.
தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள், தென்னம்பாளையம் முத்தையன்கோவிலிலும், வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள், கோட்டை ஈஸ்வரன் கோவிலிலும் காப்புக்கட்டி, நேற்று விரதம் துவங்கினர்.
விநாயகர் சிலைகள், 26ம் தேதி அந்தந்த பந்தல்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, 27ம் தேதி அதிகாலை கணபதி ேஹாமம் நடத்தி பிரதிஷ்டை செய்யப்படும். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்குமென, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.