sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பரமன் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு பக்தர்களே சாட்சி!

/

பரமன் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு பக்தர்களே சாட்சி!

பரமன் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு பக்தர்களே சாட்சி!

பரமன் நிகழ்த்தும் அற்புதங்களுக்கு பக்தர்களே சாட்சி!


ADDED : ஜன 11, 2024 07:08 AM

Google News

ADDED : ஜன 11, 2024 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஆண்டாண்டு காலத்துக்கும் எம்பெருமான் அருளாட்சி நடத்தும், கம்பீரமான அவிநாசித்திருக்கோவிலில், கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, சுண்ணாம்பு மூலிகை கலவை கொண்டு கல்வெட்டுகளை பாதுகாக்கும் திருப்பணி நடந்து வருகிறது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணி, பல்வேறு அரசர்கள் காலத்தில் நடந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானத்தின் சில பகுதி, கொங்கு சோழர்களால் கட்டப்பட்டது. அதன்பின், பாண்டிய மன்னர், ெஹாய்சாலர், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மன்னர்களும், 'காசியில் வாசி அவிநாசி' என்று, இறைவனின் பெருமைகளை உணர்ந்து திருப்பணியும், வழிபாடுகளும் நடத்தி வந்துள்ளனர்.

மைசூர் கிருஷ்ணராஜ உடையார், கி.பி., 1756ம் ஆண்டு, சங்கரையன் என்பவரை கொண்டு, கோவிலின் பழுதான பகுதிகளை செப்பனிட்டதாக, கல்வெட்டு தகவல் கூறுகிறது. மேலும், 1919ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கும்பாபிேஷகம் நடந்துள்ளது.

மத்திய தொழில்பொருள் ஆய்வுத்துறை மேற்பார்வையில் பழுதுபார்த்து, 1959ம் ஆண்டு பிப்., 4 ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில், கறுப்பு மற்றும் வெள்ளை நிற கற்களால், திருப்பணி சிறப்புடன் நடந்துள்ளது. கடந்த, 1993 ஏப்., 28ம் தேதியும், சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில், 1996 பிப்., 23ம் தேதியும் கும்பாபிேஷகம் நடந்தது.

கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு, 2008 ஜூலை 14ம் தேதி, கும்பாபிேஷகம் நடைபெற்றது. வரும், பிப்., 2ம் தேதி கும்பாபிேஷகத்துக்காக கோவில் தயாராகி வருகிறது. இதற்காக, நீராழி பத்தி, திருமாளிகை பத்தி மண்டபம், அறுபத்து மூவர் பீடம் அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள், ஹிந்து அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழுவினர், ஆன்மிக அன்பர்கள் மேற்பார்வையில், இரவும், பகலுமாக எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

கோவில் வளாகங்களில் கண்டறிந்த கல்வெட்டு தகவல்களில் இருக்கும்படியாக, கருங்கல் கட்டமைப்பை வலுவாக்கும் வகையிலும், எம்பெருமான் அருளாட்சி நடத்தும், அவிநாசித் திருக்கோவிலில், சுண்ணாம்பு மூலிகை கலவை கொண்டு திருப்பணி நடந்து வருகிறது.

பல்லாண்டு காலத்துக்கு கம்பீரமாக காத்திருந்து, தேடி வரும் பக்தருக்கெல்லாம் நொடியில் அருளும் இறைவன், இறைவியுடன் அருளோங்கி நிற்கும் வண்ணம், திருப்பணிகள் சிரத்தையுடன் நடைபெற்று வருவதாக, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்

ஆண்டு நுாறு ஆனாலும்...

அழியாது கல்வெட்டுஇதுகுறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது:கோவில் வளாகத்தில் உள்ள மூலவர் சன்னதி, அம்மன் சன்னதிகளின் சுவர்களில், மூலிகை சுண்ணாம்பு சாந்து கொண்டு திருப்பணி நடந்து வருகிறது. கருங்கற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில், மூலிகை சாந்து வைத்து வலுவாக்கப்படுகிறது. இதனால், மேலும் பல்லாண்டு காலம் கோவில் வளாகமும், கோபுரங்களும் கம்பீராக நிற்கும்.ஆற்று மணல், சுண்ணாம்பு, கடுக்காய், பனங்கருப்பட்டி, கற்றாழை, நெல்லி, தான்றிக்காய் ஆகிய பொருட்களை கொண்டு, சாந்து கலவை தயாரித்து, சுவர்களை வலுவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. கோவில் வளாகம் முழுவதும், கருங்கல் தளம் அமைத்து மறுசீரமைக்கும் பணியும் நேர்த்தியாக நடந்து வருகிறது. இவ்வகை திருப்பணி நுாறாண்டு ஆனாலும், அப்படியே இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us