/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தன்பாத்' ரயில் ரத்து பயணிகள் ஏமாற்றம்
/
'தன்பாத்' ரயில் ரத்து பயணிகள் ஏமாற்றம்
ADDED : செப் 27, 2024 12:28 AM
திருப்பூர் : கோவையில் புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு வழியாக தன்பாத் செல்லும் வாராந்திர ரயில் இயக்கம் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம், வாரங்கல் - காசர்பேட் வழித்தடத்தில் பொறியியல் மேம்பாட்டு பணி, தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், நாளை (28ம் தேதி) மற்றும் அக்., 5ம் தேதி கோவையில் இருந்து தன்பாத் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:03326) இயக்கம் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு, கோவையில் இருந்து புறப்பட்டு, திருப்பூர், ஈரோட்டில் வட மாநில பயணிகளை அதிகளவில் அழைத்து செல்லும், முன்பதிவில்லா பெட்டிகளை அதிகளவில் கொண்ட வாராந்திர ரயிலாக தன்பாத் ரயில் இருந்தது. இந்த ரயில் இயக்கம் ரத்தால் வடமாநில பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.