/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்
/
சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 17, 2025 01:23 AM
திருப்பூர்: திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம், சாமுண்டிபுரம், குலாம் காதர் கார்டன், பி.என். ரோடு எம்.ஜி.ஆர்., நகர், ராம் நகர் சாய் பள்ளி எதிரில், கருவம்பாளையம் கே.டி.சி. பள்ளி ரோடு, அனுப்பர்பாளையம் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம் ஆகிய இடங்களில் இம்முகாம் நடைபெற்றது.
எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் கருவி இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை லயன்ஸ் கிளப் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர்கள் பாலதண்டபாணி, ராம்குமார், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

