/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்
/
சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்
ADDED : நவ 16, 2025 12:26 AM

திருப்பூர்: உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் கிரியேட்டர், பல்லடம் மற்றும் திருப்பூர் பாண்டியன் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் வெள்ளியங்காடு பஸ் ஸ்டாப் அருகில், ரத்த சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமை முதல் துணை கவர்னர் செல்வராஜ், இரண்டாம் துணை கவர்னர் நந்தகோபால் துவக்கி வைத்தனர். ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், டயாபடிக் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், எல்.ஐ.சி.எப். ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன், மாவட்ட செயலாளர் விஸ்வேஸ்வரன், மண்டல தலைவர் வல்புர்சாமி, வட்டாரத் தலைவர் ராம்பிரபு, பாண்டியன் லயன்ஸ் சங்க தலைவர், வட்டாரத் தலைவர் ராமு செந்துார்பாண்டியன் முகாமை ஒருங்கிணைத்தனர்.
செயலாளர் நாகராஜன், பொருளாளர்கள் சதீஷ், முத்துக்குமார் பங்கேற்றனர். மோகன் குமார் ஒருங்கிணைத்தார்.

