/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலத்தில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு
/
மேம்பாலத்தில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 16, 2025 12:25 AM

திருப்பூர்: திருப்பூர் புஷ்பா மேம்பாலத்தில் திடீரென அரசு பஸ் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ், புஷ்பா ரயில்வே மேம்பாலத்தில் திடீரென பழுதாகி நின்றது. பஸ் பழுதாகி நீண்ட நேரம் கழித்து வந்த, போக்குவரத்து துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பழுதாகி நின்ற பஸ்சால், மேம்பாலம் ஏறும் இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பஸ் பழுதானது குறித்து தெரிந்தும், போக்குவரத்து போலீசார் வர தாமதம் ஏற்பட்டது.
அங்கு வந்த கொங்கு நகர் போக்குவரத்து எஸ்.ஐ. சுரேஷ், வாகன ஓட்டிகளிடம் கடுகடுவென நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. தகவலறிந்தும் தாமதமாக வந்த, எஸ்.ஐ.,யின் செயலை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

