/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீரிழிவு நோய்க்கு... மனப்போராட்டமும் காரணம்
/
நீரிழிவு நோய்க்கு... மனப்போராட்டமும் காரணம்
ADDED : நவ 13, 2025 10:18 PM
உ லகில், புதிது புதிதாய் நோய்கள் உருவாவதும், அதை குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதில், சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் என்பது, குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் பலரையும் பாதித்து வருகிறது. உலகளவில், பல கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
'இந்நோய்க்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் நிலையில், இயற்கை மற்றும் முழுமையான சிகிச்சை வழிகள் குறித்து விழிப்புணர்வு பெறுவது அவசியம்' என்கின்றனர் மருத்துவர்கள்.
இதுகுறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் தான், ஆண்டுதோறும், நவ. 14ல் உலக நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக் கருத்தை ஐ.நா., சபை முன்னெடுக்கும் நிலையில், இந்தாண்டின், மையக் கருத்தாக 'நீரிழிவு நோயாளிகளும் நல வாழ்வும்' என்ற மையக்கருத்து முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.
ேஹாமியோபதி மருத்துவ நிபுணர் ராஹிலா ரகுமான் கூறியதாவது: நீரிழிவு நோய் உடல் பிரச்னை சார்ந்தது மட்டுமின்றி, மனநிலையுடனும் தொடர்புடையது.
மனப் போராட்டம், நீண்ட கால மன அழுத்தம், வாழ்வியல் சூழலில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவை உடல் ஹார்மோன் சமநிலையை பாதித்து, நீரிழிவை துாண்டுகிறது.
மன அழுத்தம் காரணமாக உடலில் 'கார்டிசோல்' போன்ற ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து, இன்சுலின் செயல்பாடு குறைகிறது; இதனால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
ேஹாமியோபதி மருத்துவம், உடல் மற்றும் மனம் என, இரண்டிலும் சமநிலையை ஏற்படுத்தி, இன்சுரலின் சுரப்பின் இயற்கை செயல்பாட்டை துாண்டுகிறது.
இதன் வாயிலாக, மன அழுத்தம் குறைந்து, நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும், அதன் பக்க விளைவு களான உடல் பலவீனம், சிறுநீர் தொற்று, பாதம் மற்றும் கால் பகுதியில் உணர்வு இழப்பு, பாத எரிச்சல், புண்கள் ஆறாமை, கண் பார்வை குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
நோய் மட்டுமல்லாது, அதன் பக்க விளைவுகளை குறைக்க ஹோமியோபதி மருத்துவம் உதவுகிறது. நீரிழிவால் ஏற்படும் நாள்பட்ட கால் புண்களுக்கு இது சிறந்த தீர்வாகவும் அமையும். இந்த மருந்துகள் உடல் திசுக்கள் புதுப்பிப்பை துாண்டி, காயங்கள் மெதுவாக, இயற்கையாக ஆற்றுவதற்கு உதவுகிறது.
இதனால், உறுப்பு இழப்பை தவிர்க்க முடியும். இது நோயின் வேதனையை குறைத்து, எதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது.
ஒவ்வொரு நபரின் உடல் தன்மை, வாழ்க்கை முறை போன்றவற்றின் அடிப்படையில், ேஹாமியோபதி சிகிச்சை தனிப்பட்ட முறையில் வழங்கப்படுவதால், நீரிழிவு நோய்க்கும் அதன் பக்க விளைவுகளுக்கும் முழுமையான தீர்வு கிடைக்கும்.
- இன்று (நவ. 14ம் தேதி) உலக நீரிழிவு நாள் -

