/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவரச சிகிச்சை தேவைப்படும் நிலை.. போதிய வசதிகள் இன்றி தடுமாறும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
/
அவரச சிகிச்சை தேவைப்படும் நிலை.. போதிய வசதிகள் இன்றி தடுமாறும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
அவரச சிகிச்சை தேவைப்படும் நிலை.. போதிய வசதிகள் இன்றி தடுமாறும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
அவரச சிகிச்சை தேவைப்படும் நிலை.. போதிய வசதிகள் இன்றி தடுமாறும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
ADDED : நவ 13, 2025 10:18 PM

காங்கயம்: காங்கயம் தாலுகா மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக, கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வரை எவ்வித உள்கட்டமைப்பு, டாக்டர், செவிலியர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தாமல், பெயருக்கு மட்டுமே மாவட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
திருப்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. திருப்பூருக்கு மாற்றாக காங்கயத்தில் உள்ள தாலுகா மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக கடந்த, 3 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது. இதனால், வெள்ளகோவில், மூலனுார், முத்துார், ஊதியூர் உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து மக்கள் அவசர சிகிச்சைக்கு கோவைக்கு அல்லது திருப்பூருக்கு செல்ல வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பின், 12 கோடி செலவில், 50 படுக்கைகளுடன் புதிய விரிவுபடுத்தப்பட்ட கட்டடம், நான்கு தளங்களில் கட்டப்பட்டது.
வசதிகள் பற்றாக்குறை
ஆனால், உள்கட்டமைப்பு, டாக்டர், புதிய கட்டடங்கள் போன்றவை மேம்படுத்தப்படாமல் உள்ளது. பெயருக்கு மட்டுமே மாவட்ட மருத்துவமனையாக உள்ளது. இன்னமும், தாலுகா அளவிலான வசதிகளை மட்டுமே கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக, 400 முதல், 500 வரை வருகின்றனர். உள்நோயாளிகளாக, 40 முதல் 50 பேர் தங்கி சிகிச்சை பெருகின்றனர்.
விபத்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிரமான சிகிச்சைக்கு வரகூடிய நபர்களுக்கு, இங்கு சிகிச்சை அளிக்க முடியாமல், திருப்பூருக்கு பரிந்துரை செய்யும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில், டாக்டரில் ஆரம்பித்து, செவிலியர், உதவியாளர், துாய்மை பணியாளர்கள் என, அனைத்து பிரிவிலும் பெருவாரியான பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.
கட்டடம் திறக்க தாமதம்
ஐம்பது படுக்கைகளுடன் கட்டப்பட்டு பணிகள் முடிந்த நிலையில், தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. மாவட்ட மருத்துவமனை என்றால், குறைந்தது 300 படுக்கை வசதிகளுடன் இருக்க வேண்டும். ஆனால், இங்கு புறநோயாளிகள், உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழலில் உள்ளது. திறக்கப்படாமல் உள்ள கட்டடத்தில், தற்போது, சுவர்களில் விரிசல், டைல்ஸ் கற்கள் பெயர்ந்து வருகிறது.
தற்போது இயங்கி வரும் கட்டடடத்தில், 70 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஒரு வார்டு பகுதி முற்றிலும் சேதமடைந்து, கழிப்பிடம் போன்றவற்றை பயன்படுத்த முடியவில்லை. இதனை சரி செய்ய கோரிக்கை வைத்தும், கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, அந்த வார்டை பயன்படுத்ததாத காரணத்தால், தற்போது, 40 முதல், 50 பேர் வரை அளவில் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் சூழலில் உள்ளது.
ஒரே நுழைவாயில்
மாவட்ட தலைமை மருத்துவமனை திருப்பூர் ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் எதிரே அமைந்துள்ளது. காவலாளி இல்லாத காரணத்தால், வாகனங்களை நிறுத்தி செல்லும் டூவீலர் ஸ்டாண்ட் ஆக மருத்துவமனை வளாகம் மாறி விட்டது. நோயாளிகள், வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் உள்ளே வந்து திரும்ப முடியாத அளவிற்கான ஆக்கிரமிப்பு உள்ளது. மாவட்ட மருத்துவமனைக்கு, இரு நுழைவாயில் உள்ளது வழக்கம். ஆனால், இங்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. பிரேத பரிசோதனை கூடம் அருகே, ஒரு நுழைவாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும், ஏற்படுத்தவில்லை. அவசர காலங்களில் வாகனங்கள் வெளியேறுவது பெரும் சிரமம்.
பழமையான பிரேத பரிசோதனை கூடம்
புதிய கட்டடம் அருகே பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. இந்த கூடம், கடந்த, 1940ல் கட்டப்பட்டவை. 85 ஆண்டுகளாகியும், இன்னமும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. புதிய கட்டட மேல்மாடியில் இருந்து பார்த்தால், பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளே நடக்கும் பணி, வெட்ட வெளிச்சமாக தெரியும். இப்பிரச்னை, புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்த பின்னே தெரிய வரும். எனவே, மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை உடனடியாக தலையிட்டு வசதிகளை மேம்படுத்தி, காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, அமைச்சர் தொகுதியில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் நிலைமை, மிகுந்த பரிதாப நிலைக்கு இருந்து வருவது வேதனையான ஒன்று.
காவலாளி இல்லாத காரணத்தால், வாகனங்களை நிறுத்தி செல்லும் டூவீலர் ஸ்டாண்ட் ஆக மருத்துவமனை வளாகம் மாறி விட்டது. நோயாளிகள், வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் உள்ளே வந்து திரும்ப முடியாத அளவிற்கான ஆக்கிரமிப்பு உள்ளது

