/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பெரிய கோவிலில் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் தீவிர சோதனை
/
அவிநாசி பெரிய கோவிலில் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் தீவிர சோதனை
அவிநாசி பெரிய கோவிலில் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் தீவிர சோதனை
அவிநாசி பெரிய கோவிலில் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் தீவிர சோதனை
ADDED : நவ 13, 2025 10:15 PM

அவிநாசி: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், ஒரு பகுதியாக வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், அவிநாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், எஸ்.பி. அசோக் க்ரிஷ் யாதவ் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட நாசவேலை தடுப்பு பிரிவை சேர்ந்த கிஷோர்குமார் தலைமையில் தமிழழகன், அருண்குமார், பார்த்திபன் உட்பட குழுவினர் கோவிலில் வாகனங்கள் நிறுத்தும் வெளி வளாகம், இரண்டாம் பிரகார பகுதிகள், உள் பிரகாரம் என அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். கோவிலில் அனைத்து இடங்களிலும், வெடி பொருள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
அதனை தொடர்ந்து, சந்தேகத்துக்கு இடமான வகையில், பொருள், பை ஏதாவது இருந்தால், உடனடியாக தகவல் அளிக்க வேண்டுமென, கோவில் அலுவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர் களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

