/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேல்நிலை தொட்டி திறப்பு விழா: அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு
/
மேல்நிலை தொட்டி திறப்பு விழா: அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு
மேல்நிலை தொட்டி திறப்பு விழா: அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு
மேல்நிலை தொட்டி திறப்பு விழா: அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு
ADDED : நவ 13, 2025 10:12 PM
திருப்பூர்: குண்டடம் அருகே, மேல்நிலைத் தொட்டி திறப்பு விழாவில், குழாய் 'செட்டப்' செய்யப்பட்டதாக அமைச்சர் முன்னிலையில் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், சொக்கம்பாளையம் ஊராட்சியில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இத்தொட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதற்காக, மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ள இடத்தில், ஒரு குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, அதை அமைச்சர் கயல்விழி அதனை திறந்து வைத்தார்.
பொதுமக்கள் சிலர், 'இந்தக்குழாய் இணைப்பு இது வரை தரப்படவில்லை. அமைச்சர் வருகைக்காக 'செட்டப்' செய்துள்ளனர், ' அமைச்சரிடம் குற்றம்சாட்டினர்.
உடனே, அமைச்சரிடம், பி.டி.ஓ. ரமேஷ், ''வீட்டு இணைப்புகளை உடனடியாக துவக்கி வைக்க முடியாது என்பதால், தொட்டி அருகே இணைப்பு கொடுத்து குழாய் அமைக்கப்பட்டது.
இதற்கு சிமென்ட் தளம் அமைத்த அது ஈரம் காய நேரம் பிடிக்கும் என்பதால் செய்யவில்லை. நாளை இதற்கான பணி செய்யப்படும். சுற்றிலும் பாதுகாப்பு வேலியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என விளக்கம் அளித்தார்.

