/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விரிவாக்கப்பணியால் சிரமம்; சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை
/
சாலை விரிவாக்கப்பணியால் சிரமம்; சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை
சாலை விரிவாக்கப்பணியால் சிரமம்; சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை
சாலை விரிவாக்கப்பணியால் சிரமம்; சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஆக 21, 2025 11:16 PM

அவிநாசி; அவிநாசி - மேட்டுப்பாளையம் இடைப்பட்ட நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடந்து வரும் நிலையில், கருவலுார் பகுதியில் சாலை உயர்த்தி புதுப்பிக்கப்பட்டதால், வியாபாரிகள் பாதித்தனர்; இதுதொடர்பாக, 'தினமலர்' நாளிதழிலில் செய்தி வெளியான நிலையில், இடையூறு சீரமைக்கப்பட்டது.
அவிநாசி - மேட்டுப்பாளையம் இடைப்பட்ட நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி, மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, இரு வழி சாலையாக இருந்த, இச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவு பெற போகிறது. இந்நிலையில், கருவலுார் பகுதியில் ஏற்கனவே உள்ள சாலை புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்ட நிலையில் அதன் உயரம் அதிகமானது. இதனால், சாலையை ஒட்டிய கடைகளுக்கு செல்லும் வியாபாரிகள், பாதாசாரிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். இதுதொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, இப்பிரச்னையை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்தனர்.