/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டிஜிட்டல் டேக்' சொல்கிறது... பின்னலாடை நகரம் ஆயத்தம்
/
'டிஜிட்டல் டேக்' சொல்கிறது... பின்னலாடை நகரம் ஆயத்தம்
'டிஜிட்டல் டேக்' சொல்கிறது... பின்னலாடை நகரம் ஆயத்தம்
'டிஜிட்டல் டேக்' சொல்கிறது... பின்னலாடை நகரம் ஆயத்தம்
ADDED : மார் 01, 2026 06:38 AM

திருப்பூர்: வளர்ந்த நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வர்த்தகம் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில், திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. வரும் 2027 முதல் அமலாகும் 'டிஜிட்டல் டேக்கிங்' நடைமுறைக்கு முழு வீச்சில் திருப்பூர் தயாராகி வருகிறது.
இயற்கை பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டுடன் கூடிய மாசுபடாத உற்பத்தியை கடைநிலை வாடிக்கையாளரும், வர்த்தகர்களும் தற்போது எதிர்பார்க்கின்றனர்.
ஐரோப்பாவின், 27 நாடுகளுடன் வர்த்தகம் செய்ய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலான, உற்பத்தி தொழில்நுட்பம் அவசியம். ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து, 15 ஆண்டுகளாக நம் நாட்டு உற்பத்தியாளர்கள் அத்தகைய எதிர்பார்ப்பின் ஆழத்தை கண்டறிந்தனர். இதன் விளைவு: ஐரோப்பிய யூனியன் வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, திருப்பூர் ஏற்றுமதியாளர்களால் எளிதாக ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடிகிறது.
வளம் குன்றா வளர்ச்சி
ஆடை, ஆபரணம், காலணி என எத்தகைய நுகர்வாக இருந்தாலும், அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் முக்கியமானது. சிறிய கைக்குட்டையாக இருந்தாலும், அதன் தயாரிப்பு குறித்த ஆய்வுகளில் அந்நாட்டு மக்களும் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என்ற நிலைப்பாட்டுடன் செயல்படும் திருப்பூருக்கு அந்நாடுகளில் அதிகபட்ச வரவேற்பு கிடைக்கிறது.
பசுமை சார் உற்பத்தி
ஐரோப்பாவை பொறுத்தவரை, 2027ல் துவங்கி, 2030க்கும், படிப்படியான ஆடை இறக்குமதியில், நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி கட்டாயமாகிறது. பத்தாண்டுகள் முன்பாகவே, இதற்கு திருப்பூர் முழு அளவில் தயாராகிவிட்டது. வரும், 2027 முதல், 'டிஜிட்டல் பாஸ்போர்ட்' என்ற கூறப்படும், 'டிஜிட்டல் டேக்கிங்' என்பது கட்டாயமாகிறது.
படிநிலைகள் அறியலாம்
நாம் ஒரு பொருள் வாங்கும் போது, அத்துடன் இணைத்துள்ள 'டேக்'கில், விலையை மட்டுமே கவனித்து வாங்குவோம். இனிமேல், ஒவ்வொரு ஆடையுடன் ஏற்றுமதியாகும் 'டேக்' தான், ஆடை உற்பத்தி படிநிலைகளை முழுமையாக ஆவணப்படுத்தும் ஆதாரமாகவும் இருக்கப்போகிறது.
பருத்தி விளைந்த இடம்; 'ஜின்னிங்' மூலம் பஞ்சாக மாற்றிய இடம்; நுாலாக மாற்றம் பெற்ற ஸ்பின்னிங் மில்; அதிலிருந்து துணியாக மாறியது வரை விவரங்களை எளிதாக அறியலாம். பிறகுதான் முக்கியமான 'பிராசசிங்' வருகிறது. துணிக்கு, எத்தகைய தொழில்நுட்பத்தில் சாயமிட்டு தயார்படுத்தப்பட்டது; ஒரு கிலோ துணிக்கு, எவ்வளவு தண்ணீர், சாயம் பயன்படுத்தப்பட்டது; சாயம், உயரிய அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டதா, ஆடை வடிவமைப்பு, 'பிரின்டிங்' சேவைப்பணியின் முழு விவரம், எம்ப்ராய்டரிங், பட்டன் உள்ளிட்ட உபபொருட்களின் வரலாறு என, ஒட்டுமொத்த உற்பத்தி படிநிலைகளும், அந்த 'டிஜிட்டல் டேக்'கில் இருக்கும்.
வாடிக்கையாளர், ஆடையை வாங்கும் முன்பு, 'டிஜிட்டல் டேக்'கை ஸ்கேன் செய்தால் போதும், இவ்வளவு விவரங்களும் நேரடியாக அறியலாம். இத்தகைய பசுமை சார் ஆடை உற்பத்தி முயற்சிக்காக, கூடுதலாக செலவழிக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

