/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்த தேசிய நெடுஞ்சாலை அதிகரித்து வரும் விபத்துகள்
/
சிதிலமடைந்த தேசிய நெடுஞ்சாலை அதிகரித்து வரும் விபத்துகள்
சிதிலமடைந்த தேசிய நெடுஞ்சாலை அதிகரித்து வரும் விபத்துகள்
சிதிலமடைந்த தேசிய நெடுஞ்சாலை அதிகரித்து வரும் விபத்துகள்
ADDED : ஏப் 01, 2025 10:31 PM
உடுமலை,; மடத்துக்குளம் அமராவதி ஆற்றுபாலம் குண்டும், குழியுமாக உள்ளதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை, மடத்துக்குளம் நகரங்கள் அமைந்துள்ளன. இந் ரோட்டை மதுரை, திண்டுக்கல் உட்பட தென் மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இதனால், எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் நிறைந்து காணப்படும். மேலும் இந்த ரோடு, முறையாக பராமரிக்காததால், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி, அதிகளவு வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதன் வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களும், சேதமடைந்த ரோட்டினால் திணறி வருகின்றனர். அதிலும், திருப்பூர்- திண்டுக்கல் மாவட்டத்தை இணைக்கும், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம், பல இடங்களில் உடைந்தும், ஓடு தளம் முழுவதுமாக சிதிலமடைந்தும் காணப்படுகிறது.
இரவு நேரங்களில் பாலத்தில் மின்விளக்குகள், பிரதிபலிப்பானனும் இல்லாததால், பாதசாரிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த பாலத்தில் வாகனங்கள் ஆபத்தான முறையில் கடக்கும் அவல நிலை உள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் அமராவதி ஆற்றுப்பாலத்தை உடனடியாக புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.