/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்த நடைபாதை பயணியருக்கு ஆபத்து
/
சிதிலமடைந்த நடைபாதை பயணியருக்கு ஆபத்து
ADDED : ஜன 01, 2025 05:43 AM
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்ட் பைபாஸ் ரோட்டில், நடை பாதை சிதிலமடைந்துள்ளதால், பயணியர் விழுந்து விபத்து ஏற்படுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு பகுதியில் பெரிய அளவிலான மழை நீர் வடிகால் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் பயணியர் மற்றும் பைபாஸ் ரோட்டை பயன்படுத்தும் பொதுமக்கள் வசதிக்காக, மழை நீர் வடிகால் மீது, நடை பாதை அமைக்கப்பட்டது.
பேவர் பிளாக் கற்கள் மற்றும் சில்வர் கம்பிகள் அமைத்து, அழகாக அமைக்கப்பட்ட நடை பாதை, முறையாக பராமரிக்காததால், சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், பல இடங்களில் கான்கிரீட் தளம் மற்றும் நடை பாதை உடைந்து, மிகப்பெரிய ஓட்டைகள் காணப்படுகிறது. இதில் நடந்து வரும் பொதுமக்கள், எதிர்பாராத விதமாக, சாக்கடைக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
அதிலும், இரவு நேரங்களில் உள்ளே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, நடைபாதையை உடனடியாக சரி செய்ய, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

