/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துறைமுகத்தில் கன்டெய்னர் தேக்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை
/
துறைமுகத்தில் கன்டெய்னர் தேக்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை
துறைமுகத்தில் கன்டெய்னர் தேக்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை
துறைமுகத்தில் கன்டெய்னர் தேக்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை
ADDED : ஆக 23, 2011 11:28 PM
திருப்பூர் : லாரிகள் இயங்காததால், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி
செய்யப்பட்ட சரக்குகள் தேங்கியுள்ளன.
வர்த்தக ரீதியான பாதிப்புகளை
உணர்ந்து,போர்க்கால அடிப்படையில் சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 18ம் தேதி
நள்ளிரவு முதல் நடந்து வரும் லாரி ஸ்டிரைக்கில், கன்டெய்னர் லாரிகளும்
பங்கேற்றுள்ளன. இதனால், பார்சல் செய்யப்பட்ட ஏற்றுமதி பொருட்கள்,
துறைமுகங்களுக்கு சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. லாரிகள் வேலை
நிறுத்தத்தால், ஏற்றுமதி சரக்குகள் துறைமுகங்களை சென்றடைவதிலும்,
இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் துறைமுகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட
இடங்களை வந்தடைவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரவு
முதல் துறைமுகங்களை வந்தடைந்த இறக்குமதி பொருட்கள் அடங்கிய கன்டெய்னர்கள்
தேங்கியுள்ளன. கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், அங்குள்ள
குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், புதிதாக கப்பல்கள் வந்தாலும்,
அதிலிருந்து சரக்குகளை இறக்கி, குடோன்களில் வைக்க முடியாது. இதனால், புதிய
கப்பல்களை 'பெர்த்' செய்ய அனுமதிக்க வேண்டாம் என சரக்குகளை கையாளும்
நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில், 'போர்ட்
அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர்' மற்றும் இந்தியாவின் 'கிகால்' நிறுவனங்கள்
சார்பில், சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. இறக்குமதியான பொருட்கள்
அதிகமாக தேங்கியுள்ளதால், புதிய கப்பல்கள் 'பெர்த்' செய்ய அனுமதிக்க
வேண்டாம் என அந்நிறுவன தலைவர் ரகுராமன், துறைமுக டிராபிக் மேலாளருக்கு அவசர
கடிதம் அனுப்பியுள்ளார். இறக்குமதி செய்வதற்காக, தூத்துக்குடி
துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள், பாரத்துடன் நடுக்கடலில் காத்திருக்க
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டால்
மட்டுமே, நிலைமை சீராகும். வர்த்தக ரீதியான பாதிப்புகளை உணர்ந்து, மத்திய
அரசு போர்க்கால அடிப்படையில் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு ஏற்படுத்த
வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா)
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.