மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 04, 2025 03:30 AM

மதுரை: ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப வசதியாக மதுரை, திருநெல்வேலியில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்களைதெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் - மதுரை - தாம்பரம்
அக். 4 (இன்று) இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 'மெமு' சிறப்பு ரயில், நாளைகாலை 10:15 மணிக்கு மதுரை வருகிறது. மறுமார்க்கத்தில் நாளைஇரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:00 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
கழிப்பறை வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூர், பூதலுார், தஞ்சை, பாபநாசம்,கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலுார் போர்ட், பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக செல்கிறது.
திருநெல்வேலி - தாம்பரம்
அக். 5 மாலை 4:50 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
முன்பதிவில்லா 11 சேர்கார் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில், கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை,சோழவந்தான், கொடை ரோடு,திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக செல்கிறது.