/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானியத் திட்டங்கள் எளிதாக கிடைக்க "வழி' இருக்கு...!"ஐடியா' கொடுக்கும் விவசாயிகள்
/
மானியத் திட்டங்கள் எளிதாக கிடைக்க "வழி' இருக்கு...!"ஐடியா' கொடுக்கும் விவசாயிகள்
மானியத் திட்டங்கள் எளிதாக கிடைக்க "வழி' இருக்கு...!"ஐடியா' கொடுக்கும் விவசாயிகள்
மானியத் திட்டங்கள் எளிதாக கிடைக்க "வழி' இருக்கு...!"ஐடியா' கொடுக்கும் விவசாயிகள்
ADDED : ஆக 12, 2011 11:34 PM
உடுமலை : அரசின் மானியத் திட்டங்கள் எளிதாக கிடைக்க, உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை, இரண்டாக பிரிக்க வேண்டும் என விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் கட்டுப்பாட்டில், 54 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு சீசனிலும், நெல் 654 எக்டேர், கரும்பு 2,300 எக்டேர், மக்காச்சோளம் உட்பட தானியப்பயிர்கள் 6,585 எக்டேர், எண்ணெய் வித்து பயிர்கள் 5,150 எக்டேர், பருத்தி 200 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிக கிராமங்களையும், சாகுபடி பரப்பையும் கொண்டுள்ள உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், தற்போது காலிப்பணியிடங்கள் அதிகளவு உள்ளன. மையத்தை நிர்வகிக்க வேண்டிய உதவி வேளாண் இயக்குநர் பணியிடம், பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. ஐந்து உதவி வேளாண் அலுவலர்களுக்கு, 3 பேர் மட்டுமே உள்ளனர். வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், விற்பனை உதவியாளர் உட்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வழக்கமாக மேற்கொள்ளப்படும் தொழிற்நுட்ப ஆலோசனைக் கூட்டங்களும், குறித்த நேரத்தில் நடத்த முடிவதில்லை. கல்லாபுரம் பகுதியில் நெல் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படும் நிலையில், செம்மை நெல் சாகுபடி உட்பட பல்வேறு புதிய தொழிற் நுட்பங்களை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழு குள பாசனப்பகுதிகளில், கரும்பு பிரதானமாக பயிரிடப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதியின் கடைக்கோடியிலுள்ள தேவனூர்புதூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நிலக்கடலை உட்பட தானியப்பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, பல தரப்பட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுவதால், வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகள் நிர்வாகத்தை முறையாக செய்ய முடியாமல் திணறுகின்றனர். ஒரு வட்டார வேளாண் விரிவாக்க மையத்துக்கு 20 கிராமங்கள் என்ற அளவு இருந்தால் மட்டுமே, நிர்வாகப் பணிகள் எளிதாக மேற்கொள்ள முடியும் என, விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 54 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய உடுமலை வேளாண் விரிவாக்க மைய வட்டாரத்தில், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னைகளால், விவசாயிகளுக்கும், வேளாண் துறைக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது. எனவே, உடுமலை வேளாண் விரிவாக்க மையத்தை நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என, விவசாயிகள் பல்லாண்டுகளாக கோரிக்கை பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

