ADDED : ஜூலை 26, 2011 09:18 PM
உடுமலை : உடுமலை இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், மருத்துவ தின நிறைவு விழா ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்தது.
மருத்துவ தினத்தையொட்டி, உடுமலை இந்திய மருத்துவ சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, வரைதல், பொது அறிவுத்திறன், பாட்டு,நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதன் நிறைவு விழா ஐ.எம்.ஏ., ஹாலில் நடைபெற்றது. விழாவையொட்டி, மருத்துவ சங்க கட்டடத்தில், நிறுவப்பட்ட டாக்டர் பிசி ராய் உருவச்சிலையினை தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க மாநிலத்தலைவர் சடகோபன் திறந்து வைத்தார். ஐ.எம்.ஏ., தலைவர் ரமாதேவி வரவேற்றார். செயலாளர் கோமதி பேசினார். ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசினர். உடுமலை ஐ.எம்.ஏ.,வின் ஒன்பது மூத்த மருத்துவர்களை நீண்ட நாள் சேவைக்காகவும், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் மாரிமுத்து நல்லாசிரியராக கவுரவிக்கப்பட்டனர்.ரத்ததானம், கண்தானம் செய்ய ஊக்குவித்தவர்களுக்கும்; அரசுப்பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு ஐ.எம்.ஏ., மாநிலத்துணைத்தலைவர் டாக்டர் பாலசுந்தரம், டாக்டர் சடகோபன் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் ஜான்சி நன்றி கூறினார்.