/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி எஸ்.பி.,யிடம் மக்கள் மனு
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி எஸ்.பி.,யிடம் மக்கள் மனு
ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : திருப்பூர் 11 செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்; அவரது மனைவி கவிதா; சில ஆண்டுகளாக இவர்கள், ஏலச்சீட்டு மற்றும் பலகார சீட்டு நடத்தியுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், இவர்களிடம் ஏலச்சீட்டு மற்றும் பலகார சீட்டில் மாதம் 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை செலுத்தியுள்ளனர். சில மாதங்களாக சீட்டு ஏலம் எடுத்தவர்களுக்கு முறையாக பணம் தரவில்லை; பணம் கேட்டவர்களை இழுத்தடித்துள்ளனர். சில வாரங்களாக ஆனந்த குமார், கவிதா இருவரும் தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்டோர், அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காததால், எஸ்.பி.,யிடம் நேற்று மனு அளித்தனர்.