ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : மா.கம்யூ மங்கலம் கிளை மாநாடு, சுல்தான்பேட்டையில் நடந்தது.
மா.கம்யூ., தலைவர் ஷாகீர் தலைமை வகித்தார். கிளை செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். மாநாட்டில், 'மங்கலம் மேல்நிலைப்பள்ளி அருகில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் மக்கள் வசதிக்காக, பொதுக்கழிப்பிடம் கட்ட வேண்டும்; கூடுதல் ரேஷன் கடைகள் திறக்க வேண்டும்.'குப்பை, சாக்கடை, குடிநீர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் - அவினாசி செல்லும் 'ஏ7' பஸ் முழு நேரம் இயக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்களை நியமித்து, செயல்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். மின்வாரிய அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்,' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வடிவேல், தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வேலுசாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.