/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
"ரீசார்ஜ்' கார்டு அதிக விலைக்கு விற்பனை: அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
/
"ரீசார்ஜ்' கார்டு அதிக விலைக்கு விற்பனை: அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
"ரீசார்ஜ்' கார்டு அதிக விலைக்கு விற்பனை: அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
"ரீசார்ஜ்' கார்டு அதிக விலைக்கு விற்பனை: அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
ADDED : ஆக 14, 2011 10:26 PM
திருப்பூர் : கடந்த சில நாட்களாக, திருப்பூரில் 'ரீசார்ஜ்' கார்டுகள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.மொபைல் போன் 'ரீசார்ஜ்'க்கான கமிஷன், சில மாதங்களுக்கு முன் 3.3 சதவீதமாக குறைக்கப்பட்டது.
'ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 38 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கிறது. எனவே, கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை விடுத்து ரீசார்ஜ் கார்டு விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தினர். கமிஷனை மொபைல் நிறுவனங்கள் உயர்த்தாத காரணத்தால், 'ரீசார்ஜ்' கார்டுகளின் விலையை பல விற்பனையாளர்கள் உயர்த்தியுள்ளனர்.பத்து ரூபாய் கார்டு 11 ரூபாய்க்கும், 20 ரூபாய் கார்டு 22 ரூபாய்க்கும், 30 ரூபாய் கார்டு 33 ரூபாய்க்கும், 110 ரூபாய் கார்டு 119 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். இவ்விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பலர் 'டாப்-ஆப்' செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர். சிலர், அதிக விலை கொடுத்தாவது 'ரீசார்ஜ்' செய்கின்றனர்.மாவட்ட ரீசார்ஜ் கார்டு விற்பனையாளர்கள் சங்க தலைவர் அசோக்கிடம் கேட்ட போது, ''யாரும் அதிக விலைக்கு 'ரீசார்ஜ்' கார்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, சங்க மாநிலத் தலைமை மூலம் 'நெட் ஒர்க்' நிறுவனங்களிடம் மூன்று முறை பேச்சு நடந்துள்ளது.''வினியோகஸ்தர்கள் மூலம் கடைகளுக்கு 'ரீசார்ஜ்' கார்டுகள் சப்ளை குறைந்து விட்டது. கடந்த நான்கு மாதத்தில் 40 சதவீத விற்பனை குறைந்துள்ளது. தற்போதுள்ள கார்டுகளை நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி., விலையில் மட்டுமே விற்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.