/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலையில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு :தண்ணீர் வீணாகும் அவலம்
/
உடுமலையில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு :தண்ணீர் வீணாகும் அவலம்
உடுமலையில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு :தண்ணீர் வீணாகும் அவலம்
உடுமலையில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு :தண்ணீர் வீணாகும் அவலம்
ADDED : செப் 04, 2011 11:06 PM
உடுமலை : உடுமலை அருகே நகராட்சி இரண்டாவது குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.
அதிகாரிகள் உடைப்பை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து நகராட்சி இரண்டாவது குடிநீர் திட்டத்தின் மூலமாக, தளி, ஜல்லிபட்டி, பள்ளபாளையம், போடிபட்டி வழியாக தண்ணீர் குழாய்கள் மூலமாக நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது. கடந்த 1993ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இந்த குடிநீர் திட்ட குழாயில், அவ்வப்போது, பல இடங்களில், உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் குட்டை போல் பல இடங்களில் தேங்கி நிற்பது வழக்கமாகியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் சார்பில், சீரமைப்பு பணிகள் மேற்கொண்டாலும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு இல்லாததால், தண்ணீர் விரயமாகி வருகிறது.இந்நிலையில், பள்ளபாளையம் நான்கு ரோடு அருகே நகராட்சி இரண்டாவது குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்படாததால், தண்ணீர் குளம் போல் தேங்குவதுடன், ரோட்டிலும் வெள்ளமாக யாரும் பயன்படுத்த முடியாமல் செல்கிறது.பள்ளபாளையம் நான்கு ரோடு அருகேயுள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த மக்களின் பயன்பாட்டிற்கான குடிநீர் குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், மக்கள் குழாய்களில் தண்ணீர் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.இப்பகுதி மக்கள் கூறுகையில்,' நகராட்சி குடிநீர் திட்ட குழாய் உடைப்பு காரணமாக, ஊராட்சி சார்பில், குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், குடிநீர் பிடிப்பதில் சிரமமாக உள்ளது. மாதத்தில் பல நாட்கள் இது போன்று உடைப்பினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம்,' என்றனர். அதிகாரிகள், குடிநீர் வீணாகாமல் தடுக்கும் வகையில், உடைப்பினை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.