/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேல்முருகன் கிச்சன் அப்ளையன்ஸஸ் கடை திறப்பு
/
வேல்முருகன் கிச்சன் அப்ளையன்ஸஸ் கடை திறப்பு
ADDED : செப் 04, 2011 11:06 PM
உடுமலை : உடுமலை பசுபதிவீதியில், வேல்முருகன் மெட்டல் மார்ட் மற்றும்
பர்னிச்சர் ÷ஷாரூமின் புதிய நிறுவனமான வேல்முருகன் கிச்சன் அப்ளையன்ஸஸ்
திறப்பு விழா நடந்தது.கடையினை வெங்கடேசா நிறுவனங்கள் சேர்மன் கெங்குசாமி
திறந்து வைத்தார்.
பெங்களூரூ வாழும் கலை அமைப்பு சர்வதேச நிர்வாகி அருண்
மாதவன் ஜீ குத்து விளக்கினை ஏற்றினார். மாரியம்மன் கோவில் பரம்பரை
அறங்காவலர் ஸ்ரீதர், உடுமலை அர்ச்சனேஸ்வரர் அறக்கட்டளை தலைவர்
முத்துக்குமாரசாமி, வியாபாரிகள் சங்க தலைவர் பாலநாகமாணிக்கம், நீலாவதி
சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். நேருவீதி காமாட்சி அம்மன் கோவில்
தலைவர் ராமராஜ் முதல் விற்பனையை துவக்கி வைக்க, முத்தையா பிள்ளை லே-அவுட்
சக்தி விநாயகர் கோவில் மாதவ சுப்பிரமணியம் அதை பெற்றுக்கொண்டார்.