/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொந்த விசைத்தறியாளர் இன்று முதல் ஸ்டிரைக்
/
சொந்த விசைத்தறியாளர் இன்று முதல் ஸ்டிரைக்
ADDED : செப் 04, 2011 11:07 PM
பல்லடம் : சொந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்,
பல்லடத்தில் நேற்று நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். துணை தலைவர்
சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பழனி சண்முகம் வரவேற்றார்.
கூட்டத்தில், 'விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, சங் கத்தினர்
இன்று (5ம்தேதி) முதல் 10ம் தேதி வரை, 15 ஆயிரம் தறிகளை நிறுத்தி, ஆதரவு
அளிக்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். சொந்த விசைத்தறியாளர்கள்
வேலை நிறுத்தம் காரணமாக தினமும் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 7.50 லட்சம்
மீட்டர் துணி உற்பத்தி இழப்பு ஏற்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும் 50
ஆயிரம் பேர் தற்காலிகமாக வேலைவாய்ப்பு இழப்பர்.