/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் பட்டய படிப்பு; 29ம் தேதி வரை அவகாசம்
/
வேளாண் பட்டய படிப்பு; 29ம் தேதி வரை அவகாசம்
ADDED : ஆக 25, 2025 10:32 PM
திருப்பூர்; வேளாண் கல்லுாரிகளில், பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் வரும், 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அறிக்கை: தமிழ்நாடு வேளாண் பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள, கல்லுாரிகள், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களிலும், வேளாண் பல்கலை அங்கீகாரம் பெற்ற மூன்று கல்லுாரிகள், சென்னை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், எட்டு தனியார் கல்லுாரிகள், கோவை, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களிலும் செயல்படுகின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள, 14 வேளாண் கல்லுாரிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் சார்ந்த படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு முதல்கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஆன் லைனில் மீண்டும் விண்ணப்பிக்க, வரும் 29ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்டய படிப்புக்கு, மொத்த இடங்களில், முதல்கட்ட கவுன்சிலிங்கிற்கு பிறகு காலியாக உள்ள. 497 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள், https//tnau.ucanapply.com என்கிற இணையதளம் வாயிலாக, வேளாண் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.