/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெல் வயல்களில் நேரடி ஆய்வு; விவசாயிகளுக்கு அறிவுரை
/
நெல் வயல்களில் நேரடி ஆய்வு; விவசாயிகளுக்கு அறிவுரை
நெல் வயல்களில் நேரடி ஆய்வு; விவசாயிகளுக்கு அறிவுரை
நெல் வயல்களில் நேரடி ஆய்வு; விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : டிச 15, 2024 11:03 PM

உடுமலை; மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம், கொழுமம் சுற்றுப்பகுதிகளில் அமராவதி ஆயக்கட்டு பாசனத்துக்கு நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
மேலும், கனமழையால், அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு மற்றும் குதிரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, விளைநிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுந்தரவடிவேல் தலைமையில், வேளாண், தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளடக்கிய குழுவினர் குமரலிங்கம் பகுதியில், ஆய்வு செய்தனர். நெல் மற்றும் கரும்பு விளைநிலங்களில், அக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் குழுவினர் கூறுகையில், 'கனமழை மற்றும் வெள்ளத்தால், விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் முற்றிலுமாக வடிந்து விட்டது. இதனால், பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதிக மழை மற்றும் வெள்ள நீர் தேங்கும் சமயத்தில், உடனடியாக விளைநிலத்தில் உள்ள நீரினை முழுவதுமாக வடித்து நிலத்தை நன்கு காய வைத்து, பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். வேளாண்துறை அலுவலர்களின் பரிந்துரை பெற்று, உரமிட வேண்டும்,' என்றனர்.

