/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொபைல் போன் டவரில் ஏறி மாற்றுத்திறனாளி போராட்டம்
/
மொபைல் போன் டவரில் ஏறி மாற்றுத்திறனாளி போராட்டம்
ADDED : மார் 31, 2025 07:16 AM

திருப்பூர்; திருப்பூரில் மொபைல் போன் டவர் மீது ஏறி மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் சரவணன், 54; மாற்றுத்திறனாளி. இவர், அரசால் வழங்கப்படும் டூவீலர் கேட்டு கடந்த, இரு ஆண்டுக்கு முன் கலெக்டரிடம் மனு அளித்தார்.
இதுவரை டூவீலர் வழங்கப்படவில்லை. இவருடன் விண்ணப்பித்த மற்றவர்களுக்கு வாகனம் வழங்கியதாகவும், தனக்கு அதிகாரிகள் வழங்க மறுப்பதாகவும் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினார்.
நேற்று எம்.எஸ்., நகரில் உள்ள மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற வடக்கு போலீசார் பேச்சு நடத்தினர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.