/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரின்டிங் துறையின் பிரமாண்டம் அறியலாம்
/
பிரின்டிங் துறையின் பிரமாண்டம் அறியலாம்
ADDED : ஆக 04, 2025 09:57 PM
திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, மணி மஹால் எதிரே உள்ள, 'டாப்லைட்' வளாகத்தில் நிட்ேஷா -2025' கண்காட்சி வரும் 8-ல் துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது.
பின்னலாடை தொழில்துறையினரின் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் மையமாக மாறப்போகிறது. 500க்கும் அதிகமான 'ஸ்டால்'களில், 1,000க்கும் அதிகமான முன்னணி 'பிராண்ட்' நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு இயந்திரங்களையும், தொழில்துறையினர் இயக்கி பார்த்து, தொழில்நுட்பங்களை அறியலாம். மொத்தம், 40 சதவீதம் அளவுக்கு, பிரின்டிங் மற்றும் தொடர்புடைய ஸ்டால்கள் அமைய இருக்கிறது.
இந்தியாவில் உள்ள, அனைத்து வகை பிரின்டிங் இயந்திர தயாரிப்பு நிறுவனங்களும், திருப்பூரில் சங்கமிக்கப்போகின்றன. 'டிஜிட்டல் பிரின்டிங்'கில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா கூறியதாவது: காங்கயம் ரோடு பகுதியில் இருந்து, கண்காட்சியில் உள்ள, 500 ஸ்டால்களையும் பார்வையிட, ஒன்றரை கி.மீ., துாரம் நடக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு, விரிவான நடைபாதைகளுடன் பிரமாண்டமாக கண்காட்சி வளாகம் அமைக்கப்படுகிறது.
தொழில்துறையினர் கட்டாயம் கண்காட்சியை பார்வையிட வேண்டும்; அப்போதுதான், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிய முடியும். பிரின்டிங் பிரிவில், கடந்த ஓராண்டாக ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமல்ல, அடுத்துவரும் ஓராண்டுக்கான மாற்றங்களையும், தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்ள முடியும். பிரின்டிங் துறையினரின், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு குறைப்பு நடவடிக்கைக்கு, ஆகச்சிறந்த தொழில்நுட்பங்கள் இக்கண்காட்சியில் காணலாம்.