/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரபட்ச பொறுப்பாளர்கள்; தொழிலாளர்கள் பாதிப்பு; ஆய்வு செய்ய அரசுக்கு மனு
/
பாரபட்ச பொறுப்பாளர்கள்; தொழிலாளர்கள் பாதிப்பு; ஆய்வு செய்ய அரசுக்கு மனு
பாரபட்ச பொறுப்பாளர்கள்; தொழிலாளர்கள் பாதிப்பு; ஆய்வு செய்ய அரசுக்கு மனு
பாரபட்ச பொறுப்பாளர்கள்; தொழிலாளர்கள் பாதிப்பு; ஆய்வு செய்ய அரசுக்கு மனு
ADDED : பிப் 10, 2025 10:43 PM
உடுமலை; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், விதிமுறைகளை மீறி, பணியாற்றும், பணித்தள பொறுப்பாளர்களால், தொழிலாளர்கள் பாதிக்கின்றனர்; ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நாள்தோறும், பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இத்திட்டத்தில், பல்வேறு விதிமுறை மீறல்கள், முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து மக்கள், விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், பணிகளை ஒதுக்கீடு செய்தல், மேற்பார்வை உள்ளிட்ட தேவைகளுக்காக பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த பொறுப்பாளர்களும், திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களாகவே இருக்க வேண்டும்; அவர்களது வேலைநாட்கள் அடிப்படையிலேயே, பணித்தள பொறுப்பாளர்களாக இருக்க முடியும்.
அவ்வகையில், நுாறு நாட்களுக்கு ஒரு பணித்தள பொறுப்பாளர் என்ற சுழற்சி முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த விதிமுறை பெரும்பாலான ஊராட்சிகளில், பின்பற்றப்படுவதில்லை. பணித்தள பொறுப்பாளர்கள் தங்களுக்கென உதவியாளர் நியமிக்கும் அளவுக்கு, நிரந்தர அலுவலர்களாக மாறி விட்டனர்.
இது குறித்து, தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் அனுப்பியுள்ள புகார் மனு:
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், விதிமுறைகளை மீறி, பல ஆண்டுகளாக தொடர்ந்து பணித்தள பொறுப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.
வேலை செய்யாமலேயே, அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒன்றிய அதிகாரிகள் பணித்தளத்துக்கு சென்று பார்வையிடுவதில்லை. இதனால், முறைகேடுகள் அதிகரித்துள்ளது.
இது குறித்து, அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.