/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு பஸ் இயக்கத்தில் குளறுபடி; நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
/
சிறப்பு பஸ் இயக்கத்தில் குளறுபடி; நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
சிறப்பு பஸ் இயக்கத்தில் குளறுபடி; நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
சிறப்பு பஸ் இயக்கத்தில் குளறுபடி; நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்
ADDED : மே 02, 2025 12:19 AM

திருப்பூர் : நேற்று மேதினம், விடுமுறை நாள் என்பதால், நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் செல்ல இரவு, 7:00 மணி முதல் பயணிகள் திரண்டனர். பொள்ளாச்சி, உடுமலைக்கு கூடுதல் பஸ் இயக்காததால், வந்த பஸ்களில் பெண்கள் உடைமைகளுடன் முண்டியடித்து பஸ் ஏறினர் ரேக்கில் வந்து பஸ் நிற்கும் முன் பஸ் இருக்கைகள் நிறைந்தது.
பண்டிகை தினத்தை போல், பஸ் வருவதை எதிர்பார்த்து, பஸ் நுழையுமிடத்துக்கு முன், புறக்காவல் நிலையம் அருகே பயணிகள் நின்று கொண்டனர். திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்ல புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வந்த பஸ்கள் கூட்டமாக இருந்தது. இடமில்லை என்பதால், படிக்கட்டில் நின்ற படி பலர் குழந்தைகளுடன் பயணித்தனர்.
மதுரை, தேனி, திருச்செந்துார் செல்ல வந்த பஸ்களில் இடமில்லாமல், பயணிகள் ஒதுங்கி நின்றனர். போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால், இரவு 10:00 மணிக்கு வந்த பயணிகள் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து, நள்ளிரவில் பஸ் பிடித்து பயணத்தை துவக்கினர்.
பயணிகள் கூறியதாவது:
சிறப்பு பஸ் இயக்கத்தில் சரியான திட்டமிடல் இல்லை. பொது விடுமுறைக்கு முதல் நாள் கட்டாயம் கூட்டம் இருக்கும். இதனை முன்கூட்டியே அறிந்து, கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ் இயக்கத்தை திட்டமிட்டிருக்க வேண்டும். நேற்று மதுரை, தேனி, திருச்செந்துார், திருச்சிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கியிருந்தால், பயணிகள் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்திருக்காது. பிற நாட்கள் இரவு நேரங்களில் வெறுமனே மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தி வைத்திருக்கும் போக்குவரத்து கழக அதிகாரிகள், விசேஷ நாட்களுக்கு முன், பயணிகள் கூட்டத்தை அறிந்து அதற்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வர முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.