/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூமலுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'பட்டம்' நாளிதழ் வழங்கல்
/
பூமலுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'பட்டம்' நாளிதழ் வழங்கல்
பூமலுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'பட்டம்' நாளிதழ் வழங்கல்
பூமலுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'பட்டம்' நாளிதழ் வழங்கல்
ADDED : நவ 20, 2024 12:49 AM

திருப்பூர்; திருப்பூர் அருகிலுள்ள பூமலுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் பயன் பெறும் விதமாக, 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'பட்டம்' இதழ் பதிப்பு வெளியாகிறது. மாணவர்கள் பயிலும் மொழிப்பாடம் உள்ளிட்ட பாடங்கள், பல்வேறு துறை சார்ந்த தகவல்கள், பொது அறிவு தகவல், பொழுது போக்கு அம்சங்கள், அறிவியல், பொது அறிவு வினாடி - வினா, மாணவர்கள் விவா தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம் பெறுகிறது.
இந்த 'பட்டம்' இதழை, திருப்பூர் அருகேயுள்ள பூமலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதன் துவக்க விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார்.
திருப்பூர், 'பிரித்வி இன்னர்வேர்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலன், 'பட்டம்' இதழை மாணவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்து பேசியதாவது:
மாணவர்களின் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டில் அக்கறை கொண்டு, 'தினமலர்' நாளிதழ் பல்வேறு பணிகளை பாராட்டத்தக்க வகையில் மேற்கொண்டுள்ளது. பொது தேர்வு மாதிரி வினாக்கள், ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி நிகழ்ச்சி, பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் பட்டம் நாளிதழ் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் வினியோகமாகிறது. இப்பள்ளி மாணவர்களும் இதை உரிய வகையில் பயன்படுத்தி பலன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பட்டம் இதழை பெற்றுக்கொண்ட மாணவர்கள் அதனை ஆர்வத்துடன் வாசித்தனர்.