/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் வினியோகம்
/
மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் வினியோகம்
ADDED : டிச 24, 2024 10:29 PM
உடுமலை; உடுமலை வட்டாரத்தில், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
உடுமலை வட்டாரத்தில், 150க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் மாணவர்களுக்கு, கல்வியாண்டு தோறும் நலத்திட்ட உதவிப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு தரப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறையில், மாவட்ட கல்வித்துறையிலிருந்து வட்டார கல்வித்துறை அலுவலகங்களுக்கு வழங்கப்படுகிறது.
விடுமுறையின் இறுதியில், பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்கப்படும். இறுதி நேரத்தில் வழங்கப்படுவதால் பள்ளிகளிலும் பரபரப்பு நிலையாக இருக்கும்.
பற்றாக்குறையாக உள்ள புத்தகங்களை பெறுவதற்கு, பள்ளி திறந்தும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்பிரச்னைகளை தவிர்க்க, தற்போது மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் விடுமுறையின் துவக்கத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.
உடுமலை வட்டார அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள், அந்தந்த பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டு விட்டன. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்று, மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.