/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வினியோகம்
/
விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வினியோகம்
விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வினியோகம்
விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வினியோகம்
ADDED : அக் 10, 2024 11:51 PM

உடுமலை : உடுமலை தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
உடுமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கலாமணி கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், ஏறத்தாழ, 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், உடுமலை வட்டாரத்தில், 18 ஆயிரத்து, 500 ஹெக்டேர் பரப்பளவில், தென்னை சாகுபடி செய்யப்பட்டு, பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது.
தென்னை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், நடப்பாண்டு தோட்டக்கலைத்துறை வாயிலாக, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படுகிறது. நெட்டை ரக தென்னங்கன்றுகள், ஒரு கன்று ரூ.65க்கு வழங்கப்படுகிறது.
இதற்காக, உடுமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில், 1,700 தென்னங்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தென்னந்தோப்புகளில், இடைவெளி உள்ள பகுதிகளில் நடவு செய்யவும், காய்ப்புத்திறன் குறைவாக உள்ள மரங்களுக்கு மாற்றாகவும் நாற்றுக்களை விவசாயிகள் தங்களது வயல்களில் நடவு செய்யலாம்.
இந்த நெட்டை ரக தென்னை, வறட்சியை தாங்கியும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடியாகவும் உள்ளது. தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர் சித்தேஸ்வரன், 88836 10449; உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சிங்காரவேல், 95242 27052 ; ராஜமோகன், 95854 24502 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.