/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமஸ்கிருத வகுப்பு சான்றிதழ் வினியோகம்
/
சமஸ்கிருத வகுப்பு சான்றிதழ் வினியோகம்
ADDED : ஆக 16, 2025 11:10 PM
திருப்பூர்; திருப்பூரில் நடந்த ஆறு மாத சமஸ்கிருத வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பூர் சமஸ்கிருத பாரதி சார்பில், சமஸ்கிருதம் கற்று கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை இப்பயிற்சி நிறைவு பெற்று, தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆறு மாதமாக, இப்பயிற்சியில் பங்கு பெற்று தேர்வில் வெற்றி பெற்ற, 28 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சமஸ்கிருத பாரதியின் தென் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பங்கேற்று சான்றிதழ் வழங்கினார். சமஸ்கிருத கற்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். கேரளா, தமிழகம் இரு மாநில தர்ம ஜாக்ரன் பொறுப்பாளர் ராம்ராஜ் சேகர், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், அடுத்த சுற்று தேர்வுக்கான இலவச வகுப்பு ஆரம்பமாக உள்ளது. விருப்பம் உள்ளோர், 93632 22184 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.