/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அன்புச்சோலை' நிறுவ மாவட்ட நிர்வாகம் அழைப்பு
/
'அன்புச்சோலை' நிறுவ மாவட்ட நிர்வாகம் அழைப்பு
ADDED : ஜூலை 02, 2025 09:41 PM
உடுமலை; 'அன்புச்சோலை' முதியோர் மையங்கள் நடத்த விரும்பும் தன்னார்வ அமைப்புகள், ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில், தேர்வு செய்யப் பட்ட, 25 நகராட்சி பகுதிகளில், அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்பட உள்ளன; திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்புச்சோலை மையத்துக்கு வரும் முதியோருக்கு, மதிய உணவு, சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள், சமூக சேவையாளர்கள், உடல் சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு, முதியோரின் பராமரிப்பு உறுதி செய்யப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில், அன்புச்சோலை அமைக்க, 50 முதியவர்களுடன் இயங்கும் அனைத்து வசதிகளுடன் இயங்கி வரும் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வரலாம்.
விருப்பமுள்ள தன்னார்வ அமைப்புகள், ஜூலை, 5ம் தேதி மாலை, 4:00 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.