/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட தடகள போட்டி; அரசு பள்ளி மாணவர் வெற்றி
/
மாவட்ட தடகள போட்டி; அரசு பள்ளி மாணவர் வெற்றி
ADDED : நவ 08, 2024 11:19 PM
உடுமலை ; உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில், தடகள போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவருக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த தடகளப்போட்டி நடந்தது. இதில், உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கிருஷ்ணன் பங்கேற்று, 1,500 மீ மற்றும் 3,000மீ ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து ஈரோட்டில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் லலிதா, மாணவருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சித்ரா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவரை வாழ்த்தினர்.