/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட தடகள போட்டி; ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி
/
மாவட்ட தடகள போட்டி; ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி
ADDED : நவ 06, 2024 09:27 PM

உடுமலை ; மாவட்ட அளவிலான பல்வேறு தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான தடகளப்போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.
கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜூனியர் பிரிவில், நீளம் தாண்டுதல் மற்றும் 80 மீ., தடை தாண்டுதல் போட்டியில் முதலிடம், 100 மற்றும் 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் இரண்டாமிடம், 400 மீ., ஓட்டத்தில் முதலிடம்,
சீனியர் பிரிவில், 1,500 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், சூப்பர் சீனியர் பிரிவில் 100 மீ., தடை தாண்டுதல் போட்டியில் முதலிடம், 400 மீ., தடை தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் சாரதாமணி, பள்ளி தாளாளர் சின்னராஜ், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.