/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
/
மாவட்ட அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
ADDED : நவ 07, 2025 09:38 PM
உடுமலை: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள, ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் மாவட்ட குழு பொறுப்பேற்றுக்கொண்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வரும், பரம்பரை அறங்காவலர் சாராத கோவில்களுக்கு, இத்துறை சார்பில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு கோவில்களுக்கும் தனிநபர், மூன்று பேர் அல்லது ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இதிலிருந்து, ஒருவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்ததெடுக்கப்படுகிறார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு அறங்காவலர் நியமன பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ஐந்து பேர் கொண்ட, மாவட்ட குழு நியமனம் செய்யப்படுகிறது.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு அமைக்கப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், உதவி கமிஷனர் தமிழ்வாணன் முன்னிலையில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக சுப்பிரமணியம், உறுப்பினர்களாக முத்துராமன், கலைச்செல்வி, சாமி, கலாமணி பொறுப்பேற்றனர்.
கோவில் செயல் அலுவலர் வனராஜா மற்றும் ஆய்வாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். பொறுப்பேற்ற மாவட்ட அறங்காவலர் குழுவினர் கூறுகையில், 'காலியாக உள்ள கோவில்களுக்கு விண்ணப்பம் பெற்று, வரும் டிச., மாதத்துக்குள் அறங்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

