/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட சதுரங்கப் போட்டி: 165 மாணவர்கள் பங்கேற்பு
/
மாவட்ட சதுரங்கப் போட்டி: 165 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : அக் 28, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன், பாரதி செஸ் அகாடமி சார்பில், 'சசூரி டிராபி' குழந்தைகளுக்கான மாவட்ட சதுரங்கப் போட்டி நேற்று நடந்தது.
மண்ணரை, சசூரி பள்ளியில் நடந்த போட்டியில், ஒன்பது, 12 மற்றும், 16 வயது, பொது பிரிவில் மாணவ, மாணவியர் உட்பட, 165 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சசூரி இன்ஸ்டிடியூசன்ஸ் செயலாளர் சவிதா, சசூரி பள்ளி முதல்வர் மகாலட்சுமி உள்ளிட்டோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன் நிர்வாகிகள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.