/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட சதுரங்கம்; வெற்றி பெற்றோர்
/
மாவட்ட சதுரங்கம்; வெற்றி பெற்றோர்
ADDED : நவ 25, 2024 06:24 AM
திருப்பூர்; தாராபுரத்தில் நடைபெற்ற சதுரங்க போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று, விளையாடினர்.
ரோட்டரி கிளப் ஆப் தாராபுரம் மற்றும் கோல்டன் மைண்ட் செஸ் அகாடமி சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, தாரா புரம் ரோட்டரி மஹாலில் நேற்று நடந்தது.
ஒன்பது வயது, 12 வயது, 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவு ஆண், பெண்கள் என நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 197 பேர் பங்கேற்று, சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினர்.
ஒன்பது வயது மாணவியர் பிரிவு போட்டியில், தாராபுரம் செஸ் அகாடமி சுகிதாஸ்ரீ முதலிடம்; டி.சி.பி.சி., பள்ளி திகழ்மதி இரண்டாமிடம். ஒன்பது வயது மாணவர் பிரிவில், வி.ஏ.வி., இன்டர் நேஷனல் பள்ளி யுவின் வினய் முதலிடம்; ஒயிட் நைட் செஸ் அகாடமி சித்தேஷ் இரண்டாமிடம் பிடித்தனர்.
12 வயது மாணவர் பிரிவில், தாராபுரம் செஸ் அகாடமி மாதேஸ் பாலாஜி முதலிடம்; லிட்டில் பிளவர் பள்ளி மோகித் இரண்டாமிடம். 12 வயது மாணவியர் பிரிவில், எஸ்.கே.பி., பள்ளி மாணவி தேவஸ்ரீ முதலிடம்; தாராபுரம் செஸ் அகாடமி தான்யா இரண்டாமிடம்.
மாணவர் 16 வயது பிரிவில், தாராபுரம் இந்திரா காந்தி பள்ளி ஆகாஷ் முதலிடம்; அரசு பள்ளி மாணவர் அகஸ்டின்ஜி இரண்டாமிடம்.
16 வயது மாணவியர் பிரிவில், பிரவின் செஸ் அகாடமி ஐஸ்வர்யா முதலிடம்; ஜீட் செஸ் அகாடமி தளிர் இளமதி இரண்டாமிடம்.
ஆண்கள் பொது பிரிவு போட்டியில், தர்ஷினி செஸ் அகாடமி சவுதீஸ் குமார் முதலிடம்; ஒயிட் நைட் செஸ் கிளப் தீபக் குட்டியப்பன் இரண்டா மிடம் பிடித்தனர்.
சதுரங்கப் போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பத்து இடங்கள் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பொது பிரிவில் முதல் மூன்று இடம் பிடித்தோருக்கு ரொக்க பரிசு மற்றும் பரிசு கோப்பை; நான்கு முதல் பத்தாம் இடம் பிடித்தோருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.