/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கலெக்டர் கள ஆய்வு முகாம்
/
மாவட்ட கலெக்டர் கள ஆய்வு முகாம்
ADDED : அக் 21, 2024 06:36 AM
உடுமலை, : மடத்துக்குளம் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் கள ஆய்வு முகாம், வரும் 23 மற்றும் 24ம் தேதி நடக்கிறது.
பொதுமக்கள் தங்களது பகுதி பிரச்னைகளையும் தெரிவிக்கவும், கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கும் வகையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்த துவங்கியுள்ளது.
அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான அரசுத்துறை அலுவலர்கள், தாலுகா வாரியாக முகாமிட்டு, கள ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மடத்துக்குளம் தாலுகாவில், கடந்த, 16ம் தேதி முகாம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவ மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இம்முகாம், வரும், 23ம் தேதி நடக்கிறது. அன்று, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், கிராமங்களில் அரசுத்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
23ம் தேதி, காலை, 9:00 மணி முதல், 1:30 மணி வரை, அரசு அலுவலகங்கள் மற்றும் துறை வாரியான ஆய்வும், மதியம், 2:30 முதல், 4:30 வரை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்வும் நடக்கிறது.
தொடர்ந்து, 24ம் தேதி காலை, 9:00 மணி வரை, கள ஆய்வு நடக்கிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்களது குறைகளை தெரிவித்து, தீர்வு காணலாம்.

