/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி: 'பிளாட்டோஸ்' சாம்பியன்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி: 'பிளாட்டோஸ்' சாம்பியன்
ADDED : ஜன 06, 2024 11:15 PM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடந்த மாவட்ட கிரிக்கெட் போட்டியில், பிளாட்டோஸ் அகாடமி அணி, கோப்பையை தட்டிச் சென்றது.
பள்ளி அளவில் சிறந்த கிரிக்கெட் அணிகளை தேர்வு செய்ய, திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. ஏ மற்றும் பி என, இரு பிரிவில், 11 பள்ளி அணிகள் பங்கேற்றன. கடந்த, 25ம் தேதி முதல், ஒவ்வொரு பிரிவில் உள்ள பள்ளி அணிகளுக்கு இடையே லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.
பிளாட்டோஸ் அகாடமி மற்றும் டீ பப்ளிக் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி அணி ஆகியவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், நேற்று, இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. முதலில் பிளாட்டோஸ் அகாடமி அணி, 30 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 195 ரன் எடுத்தனர். அதிகபட்சம், மாணவர் அபினந்த், 56 ரன், ஸ்ரீசிவாஜி, 44, இனியன், ஆட்டமிழக்காமல், 30 ரன் எடுத்தனர். அடுத்து விளையாடிய டீ பப்ளிக் பள்ளி அணி வீரர்கள், 16.1 ஓவரில், 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வெற்றி பெற்ற பிளாட்டோஸ் அகாடமி அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.