ADDED : அக் 26, 2026 08:11 PM

திருப்பூர்: பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி, மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில் இன்று (அக்.,26) நடந்தது. மாவட்டப் போட்டிகளின் கண்காணிப்புக் குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
குறுமையப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் பங்கேற்றனர். மாணவர், மாணவியர் 14 வயது ஒற்றையர், இரட்டையர் என நான்கு பிரிவுகளிலும் பிரன்ட்லைன் பள்ளி முதலிடம் பெற்றது.
மாணவர் 19 வயது ஒற்றையர் பிரிவில் ஆர்.ஜி.எம். உடுமலை பள்ளியும், இரட்டையர் பிரிவில் பிரன்ட்லைன் அகாடமியும் முதலிடம் பெற்றன. மாணவியர் 19 வயது ஒற்றையர், இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் பிரன்ட்லைன் பள்ளி முதலிடம் பிடித்தது.
மாணவர், மாணவியர் 17 வயது பிரிவுகளுக்கான மாவட்ட இறகுப்பந்து போட்டிகள் வரும் 6ம் தேதி நடைபெறுகின்றன.
மோகன்ஸ் அகாடமியில், மாவட்ட இறகுப்பந்துப்போட்டி நடந்தது.
