தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தையல் தொழிலாளர் போனஸ் கோரிக்கை

தையல் தொழிலாளர் போனஸ் கோரிக்கை

தையல் தொழிலாளர் போனஸ் கோரிக்கை


UPDATED : அக் 26, 2026 08:11 PM

ADDED : அக் 26, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 08:11 PM ADDED : அக் 26, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழகத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த தையல் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வேண்டும் என, திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கலெக்டரிடம் அளித்த மனு:

தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு அமைப்புகளில் பணிபுரிகின்றனர். புதுச்சேரியைப் போன்று தமிழகத்திலும் நலவாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தையல் தொழிலாளர் நலவாரியத்துக்கு தனி நிதியம் ஏற்படுத்தி, மாநில, மாவட்ட அளவில் முத்தரப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்.

ஆயத்த ஆடை நிறுவனத் தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டங்களை அமல்படுத்தி, 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். வீடற்ற தொழிலாளர்களுக்கு இலவச வீடும், அவர்களது குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகையும் வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us