/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கால்பந்து போட்டி; என்.வி., பள்ளிக்கு பாராட்டு
/
மாவட்ட கால்பந்து போட்டி; என்.வி., பள்ளிக்கு பாராட்டு
மாவட்ட கால்பந்து போட்டி; என்.வி., பள்ளிக்கு பாராட்டு
மாவட்ட கால்பந்து போட்டி; என்.வி., பள்ளிக்கு பாராட்டு
ADDED : செப் 23, 2024 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை ; மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்.வி., மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, திருப்பூரில் நடந்தது. இப்போட்டியில், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளி மாணவியர் பங்கேற்று முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற இப்பள்ளி அணிக்கு, 54 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இப்பள்ளி அணி மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
பரிசு பெற்ற மாணவியருக்கு பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.