தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவட்ட ஜூடோ 156 பேர் ஆர்வம்  

மாவட்ட ஜூடோ 156 பேர் ஆர்வம்  

மாவட்ட ஜூடோ 156 பேர் ஆர்வம்  


ADDED : ஆக 13, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஆக. 14–

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான மாணவர் ஜூடோ போட்டிகள், திருப்பூர் எஸ்.டி.ஏ.டி. உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றன.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (ஓய்வு) லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கண்காணிப்புக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மேற்பார்வையில் ஆனந்தன், முருகன், சுப்பிரமணி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

14 வயதுப் பிரிவில் (7 எடைப்பிரிவுகள்) – 58 பேர்; 17 வயதுப் பிரிவில் (10 எடைப்பிரிவுகள்) – 57 பேர்; 19 வயதுப் பிரிவில் (10 எடைப்பிரிவுகள்) – 41 பேர் என மொத்தம் 156 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள், மாநில அளவிலான ஜூடோ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

–––

எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான மாணவர் பிரிவு ஜூடோ போட்டி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us