ADDED : ஆக 18, 2024 11:53 PM

உடலிலும், உள்ளத்திலும் வலிமை கொள்; வாகை சூடுவாய், ஒருநாள்!
''நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன்; சர்வ வல்லமை படைத்தவன்'' என்கிறார் சுவாமி விவேகானந்தர். எதிரிகள் தாக்கத்தான் செய்வார்கள்; தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுவிடுவோம், எதிரிகளை முறியடிக்கும் திறனைப் பெற்றுவிடுவோம், நாமும். நெஞ்சிலே வலுகொண்டால், வெற்றி நம்மைத் தஞ்சமடையும்.
திருப்பூர், அணைப்புதுாரில் உள்ள 'டீ' பப்ளிக் பள்ளியில், மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், மாவட்ட ஜூனியர் தடகளப்போட்டி நேற்று நடந்தது.
உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், ஓட்டப்பந்தயத்தில் உத்வேகம் பொங்க பங்கேற்ற மாணவ, மாணவியர்.
தடைகளைத் தாண்டினால்தான், வெற்றிக்கோட்டை அடைய முடியும். அதற்கு உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. உண்மையான உழைப்பு என்றுமே வீண் போகாது.
- 'இந்தியாவின் தங்க மங்கை' பி.டி.உஷா
எந்தவிதமான வழியிலும் தொல்வியடைவதை நான் விரும்பவில்லை. வரலாற்றில் நான் இடம்பெற வேண்டுமென்றால், என் இலக்கினை நான் அடையவேண்டும்.
- ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் எட்டு முறை தங்கம் வென்ற உசைன்போல்ட்.
“பழைய தோல்விகள், முதுகு வலி, கால் வலி என எல்லாவற்றையும் துாக்கி எறிந்துவிட்டு ஓடு, உறுதியாக ஓடு, முன்பை விட உறுதியாக முன்பைவிட வேகமாக”
- உசைன் போல்ட்டின் பயிற்சியாளர் மில்ஸ்.
ஈட்டியின் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது; அதை எடுத்தேன். இந்த ஈட்டி என்னை இவ்வளவு துாரம் கொண்டு வரும் என்று அப்போது எனக்குத் தெரியாது.
- நீரஜ் சோப்ரா, ஈட்டி எறியும் வீரர்,
ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவர்.
மிகப்பெரிய சொத்து வலிமையான மனம். என்னை விட யாரோ ஒருவர் கடினமாகப் பயிற்சி செய்கிறார் என்றால், எனக்கு மன்னிப்பு இல்லை.
- பி.வி.சிந்து, பேட்மின்டன் வீராங்கனை, ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.
மிகப்பெரிய சொத்து வலிமையான மனம். என்னை விட
யாரோ ஒருவர் கடினமாகப் பயிற்சி செய்கிறார் என்றால், எனக்கு மன்னிப்பு இல்லை.
- பி.வி.சிந்து, பேட்மின்டன்
2019ல் உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.

